தமிழ் சினிமாவை போன்று மலையாள சினிமா இல்லை. தமிழ் சினிமாவில் ஒரு பாட்டு ஒரு சண்டை காட்சி இருந்தால் போதும் நடிப்பு தேவை இல்லை, ஆனால் மலையாள சினிமாவில் அதிகம் நடிக்கவேண்டும்.
அதனால் தான் யாரும் மலையாள படத்தில் நடிக்க பயப்படுகிறார்கள். எனக்கு நடிப்பு இல்லாத சிறிய கதாபாத்திரம் கொடுங்கள்... மலையாளத்தில் வந்து நடிக்கிறேன். இங்கு இருக்கும் கூட்டத்தை பார்த்தால் ரெம்ப ஆச்சரியம்! தமிழ்நாட்டில் இப்படி கூட்டம் பார்க்க முடியாது என்று தனது மலையாள விசுவாசத்தை ரொம்பவே காட்டியிருந்தார் ஆர்யா.
ஆர்யாவின் இந்த பேச்சுக்கு இயக்குநரும்,தயாரிப்பாளரும், பெப்சி அமைப்பின் தலைவருமான வி.சி.குகநாதன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதையடுத்து உலகமெங்கும் வாழும் தமிழர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆர்யாவின் இந்த பேச்சை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம்



