| தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 10,000 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவர்களில் ஆயிரம் பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வது குறித்த சட்டப் பின்னணி குறித்து ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “ வன்னி இறுதி மகா யுத்தம்” என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இறுதிக்கட்ட போராட்டத்தில் மொத்தமாக 22,000 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதில் 10,000 உறுப்பினர்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். | |
|




Post a Comment